மட்டக்களப்பிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு, மீராவோடை மற்றும் கும்புருமூலை பிரதேசங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் நேற்றைய தினம் மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

மீராவோடையில் நீரேடைக்கு அருகில் பிளாஸ்டிக் குழாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கும்புறுமூலை முந்திரியம் தோட்ட பகுதயில் ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு, கைத்துப்பாக்கி ஒன்று, ஒன்பது டெட்டனேற்றர், நான்கு ஜெலிக்நைட் நான்கு, ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் 82 உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

எனினும் இது தொடர்பில் சந்தேநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.