தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன தெரிவிக்கையில்,
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் சிறுவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை இரண்டாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது இது அந்த பகுதி தொடர்பில் விழிப்புடன் மாணவர்கள் செயற்பட வேண்டும் என்று அதிகார சபை தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.