மன்னாரில் கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கைத்துப்பாக்கி , அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் ஆறு வாள்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.