சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

Report Print Satha in சமூகம்

சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஜூலை 25ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக கருத்து வெளியிட்டு மதங்களுக்கு இடையில் பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இது சம்பந்தமான விசாரணைகளின் முழுமையான அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதன்போது கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது.

அதன்படி வழக்கு எதிர்வரும் ஜூலை 25ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.