ஹிஸ்புல்லாவிற்கு எதிராக கிழக்கு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அழைப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
3656Shares

கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்கவும் என தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை அமைதியான ஆட்சேபனை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கின் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புல்லாவினை நீக்கக்கோரியும், புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்கக் கோரியும் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கினை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அமைதியான ஆட்சேபனை போராட்டத்திற்கு அனைத்து இன மக்களையும் ஆதரவு வழங்குமாறு இதில் கூறப்பட்டுள்ளது.

மக்களை நேசிக்கும் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்குமாறு அனைத்து கடமைகள் வியாபாரம் மற்றும் தொழில் நடவடிக்கையில் நிறுத்தி ஆட்சேபனை தெரிவிக்கும் எனவும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.