முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படக்கூடாது என கோரிக்கை

Report Print Kamel Kamel in சமூகம்
264Shares

முஸ்லிம் சமூகத்தினர் ஓரம் கட்டப்படக்கூடாது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முப்டி எம்.ஐ.எம். ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளடங்களாக நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் இன சமூகத்தை ஒதுக்கவோ ஓரம் கட்டவே ஏனைய இன சமூகங்கள் முனையக் கூடாது எனவும் அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.