அடிப்படைவாத போதனைகள் அடங்கிய சீடிக்களுடன் மௌலவி கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ராஜகிரிய, நாவல வீதியில் உள்ள வீடொன்றில் இஸ்லாமிய அடிப்படைவாத போதனைகள் அடங்கிய சீடிக்களுடன் மௌலவி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மௌலவியிடம் இருந்து 14 சீடிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தின் புகைப்படம் மற்றும் செல்போனையும் அதிரடிப்படையினர் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

நாவல பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடமையாற்றி வந்த இந்த மௌலவி, பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களுக்கு அடிப்படைவாத போதனைகளை செய்து வந்ததால், பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நபர் பள்ளிவாசலுக்கு அருகில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து போதனைகளை நடத்தி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.