எவ்வித அசம்பாவிதங்களுமின்றி பாதுகாக்கப்பட்டது மத்திய மாகாணம்! ஆளுநர் மைத்திரி

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மத்திய மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதால் மத்திய மாகாணம் எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் பாதுகாக்கப்பட்டது என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் வீடுகள் வசதிகள் இன்றி வறுமையில் வாழும் மக்களை இணங்கண்டு வீடமைப்பு உதவி வழங்குவதற்கான பிரதான வேலைத்திட்டத்தின் ஆரம் நிகழ்வு இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கூரை தகடுகள், சீமெந்துகள் என்பவற்றை பெறுவதற்கான காசோலைகளும் மேலும் வீடமைப்புத் திட்டத்திற்கான கடன் உதவிக்கான பத்திரங்கள் என்பன 80 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பை உறுதிப்படுத்திய நாட்டின் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆளுநர் என்ற வகையில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாது.

அத்தோடு அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைக்கு கல்வி நடவடிக்கைகாக அனுப்பி வைக்க வேண்டும்.

அத்தோடு மாணவர்களுக்கு பெரியளவிலான புத்தக பைகளை கொடுக்காமல் புத்தங்களை கையில் எடுத்து செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்தால் பாதுகாப்பு பிரச்சினையில் சிரமம் ஏற்படாது என்றார்.