மரணமடைந்தோருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குங்கள்

Report Print Mubarak in சமூகம்

நாட்டில் கோரமான முறையில் குண்டுத் தாக்குதல் மூலம் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி மிகத் துயருரும் நிலையில் உள்ள மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குமான மனிதாபிமான உதவிகளை வழங்கி உதவுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மூதூர் கிளையினால் மூதூரில் உள்ள சகல பள்ளிவாசல் ஊடாகவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில்,

மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடாத்தப்பட்ட இத்தாக்குதலை வண்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் தற்போதைய நிலையில் மக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் வாழ்வது மட்டுமின்றி அம்மக்களுக்காக இயன்ற மனிதாபிமான உதவிகளையும் மிக அவசரமாக செய்ய வேண்டியுள்ளது.

இதேவேளை மக்கள் மத்தியில் பல்வேறு விதமான வதந்திகள் பேசப்பட்டு வருவதால் மக்களை தீய சக்திகள் மோதவிட முயற்சிப்பார்கள்.

எனவே சமயத் தலைவர்கள் மற்றும் சமூக பொறுப்புள்ள அனைவரும் இன, மத, பேதமற்ற முறையில் மனித நேயத்துடன் இதற்கென பணியாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.