கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் சகோதரர் உட்பட மூவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் என்பவரின் சகோதரர் மற்றும் அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த இருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சில தினங்களுக்கு முன்னர் குண்டுதாரியின் சகோதரர் மற்றும் இந்த தாக்குதல் தொடர்பாக குண்டுதாரியும் நெருங்கிய தொடர்புகளை இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

இவர்கள் மூவரும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குண்டுதாரியின் சகோதரர் கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது..

மட்டக்குளி பிரதேசத்தில் இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.