திருகோணமலையில் பாழடைந்த காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பேதிஸ்புர பகுதியில் ரி- 56 துப்பாக்கி ரவைகள், 05 மெகசின் என்பன இன்று மீட்கப்பட்டுள்ளன.
பிரதேச மக்கள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் இவற்றை மீட்டுள்ளனர்.
இதேவேளை கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோயில்கம காட்டுப்பகுதியிலும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மஹதிவுல்வெவ குளத்துக்கு குளிக்கச் சென்ற பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து குளத்துக்கு தண்ணீர் வரும் பிரதான வாய்க்காலில் மெகசின் ரவைகள் 15 மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட ரவைகள் பொலிஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட ரவைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பீ" அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.