கடற்கரையை படம்பிடித்த ரஷ்யர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ட்ரோன் கெமராவை பயன்படுத்தி கடற்கரை ஒளிப்பதிவு செய்த ரஷ்ய பிரஜையை காலி துறைமுக பொலிஸார் இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

32 வயதான ரஷ்ய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் ட்ரோன் கெமராவில் தெவட்ட கடற்கரையில் ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த ரஷ்ய பிரஜை கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதி அவர் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நபர் ரஷ்யாவின் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணிப்புரிந்து வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் காணொளிகளை பதிவு செய்து அதனை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருபவர் எனவும் ட்ரோன் கெமராவில் ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளதால், கெமராவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரஷ்ய நாட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.