உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசீமின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபரை இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு பேணியதாகவும், நிதி விவகாரங்களுக்கு பொறுப்பாக செயற்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மொஹமட் அலியார் என்ற சந்தேக நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.