விடுதலைப் புலிகளின் நிதித்துறை முகாமில் இருந்த படையினர் வெளியேற்றம்

Report Print Mohan Mohan in சமூகம்
980Shares

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 3.5 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர்.

குறித்த தனியார் காணிகளை பொதுமக்களிடம் மீள கையளிக்கவுள்ளதாக இராணுவத்தினர் 2018 டிசம்பர் மாதமளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் அறிவித்திருந்த நிலையில் அங்கிருந்து படையினர் வெளியேறியுள்ளனர்.

2009 ஆண்டுக்கு முன்னர் குறித்த காணிகளை அதன் உரிமையாளர்களிடம் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவினர் புதிய கட்டடங்களை நிர்மாணித்து தமிழீழ வைப்பகம் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் இறுதி யுத்தத்தின் போது குறித்த பகுதியை கைபற்றிய இராணுவத்தினர் அப்பகுதியில் பாரிய முகாம் ஒன்றை அமைத்து 10 வருடங்களாக நிலைகொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து படையினர் முற்றும் முழுதாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.