நீதிபதி இளஞ்செழியனின் தகப்பனார் இயற்கை எய்தினார் - பெரும் துயரத்தில் உறவினர்கள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகர் இயற்கை எய்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 88.

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு அவர்களின் உறவினர்கள் அனைவரும் மீளத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

திருகோணமலையில் கடமையில் ஈடுபட்டிருக்கும் நீதிபதி இளஞ்செழியன், தற்போது கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.