புர்கா மற்றும் நிக்காப் அணியத் தடை! சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

அனுராதபுரம் நகர சபையின் ஆட்சியின் கீழுள்ள அனைத்து பகுதிகளிலும் முகத்தை மூடும் புர்க்கா மற்றும் நிக்காப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் நுழைவதற்கும் அதற்கு அருகில் நடமாடும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக நகர சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு பிரிவு மற்றும் பொலிஸாருக்கு உதவுவதற்காக இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளின் உ றுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

புர்க்கா மற்றும் நிக்காப் அணிய தடை விதிக்க ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழி பத்திரத்தின் பிரதி அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் முகத்தை மறைக்கும் புர்க்கா உள்ளிட்ட ஆடைகளை அணி அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.