கிளிநொச்சியில் கால்நடைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக கால்நடைகள் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் எமது ஊடகவியலாளரிடம் நேரடியாக இன்றுஇதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள்,

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கால்நடைகளை கட்டுப்படுத்த இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் கால்நடைகள் சிறுபோக செய்கைகளை அழித்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது, கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற இரணைமடு குளத்தினுடைய பயிர்ச்செய்கை கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் செம்டெம்பர் மாதம் 06ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான கால எல்லையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வரை கால்நடைகளை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் பயிர்செய்கைகளை கால்நடைகள் தினமும், அழித்து வருகின்றன எனவும் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.