தற்கொலை தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி தொடர்பில் தவ்ஹித் ஜமாத் வெளியிட்ட தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

தற்கொலை தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி தொடர்பில் சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் கருத்து வெளியிட்டுள்ளார்.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய மொஹம்மது ஹஸ்துன் என்ற பயங்கரவாதியின் மனைவியான சாரா என்ற புலஸ்தினி தனது சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாம் சமயத்தை தழுவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலஸ்தினி மகேந்திரனின் தாய் ஊடகங்களிடம் பல தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்து சமய பெண்ணான சாரா கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டதாகவும், தனது மகள் தூய்மையான சைவ சமயத்தை சார்ந்த பெண் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தனது மகள் கடத்திச் செல்லப்பட்டு சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் என்பவரிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் புலஸ்தினியின் தாயார் கூறியிருந்தார்.

புலஸ்தினியின் தாயார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புலஸ்தினி தனது சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாம் சமயத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தை கற்றுக்கொண்ட பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி புறப்பட்டு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாம் சமயத்தை விரும்பி தழுவியதாக கடிதம் மூலம் தமது அமைப்புக்கு அறிவித்துள்ளதாகவும், புலஸ்தினி புறப்பட்டு சென்ற பின்னர் அவருடன் எந்த தொடர்பு தமது அமைப்புக்கு இருக்கவில்லை எனவும் ராசிக் கூறியுள்ளார்.

இதேவேளை, புலஸ்தினி மகேந்திரனை பலவந்தமாக கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை உடனடியாக கைது செய்யுமாறு, பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

கடந்த 25ம் திகதி சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட விசேட முற்றுகையின் போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் புலஸ்தினி கொல்லப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Like This Video