முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் பணியாளர் ஐ.எஸ் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் பணியாளர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பேணியதாகக் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடவில் அமைந்துள்ள இலங்கையின் முதனிலை தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் பணியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பணியாளர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் தீவிரவாத பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இராணுவ விசேடப் பிரிவு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.