இலங்கையரை அடிமைச் சேவகத்தில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு அமெரிக்காவில் விரைவில் தண்டனை?

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையர் ஒரு வரை அடிமையாக நடத்தியதாக அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கில் குறித்த பெண் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் இலங்கையர், இவ்வாறு அடிமையாக நடத்தப்பட்டுள்ளதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் குறித்த பெண் இலங்கையரை பலவந்தப்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வுட்லலான்ட் பார்க்கில் அமைந்துள்ள தமது வீட்டை பராமரித்தல், பிள்ளைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இலங்கையர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளை பராமரிப்பதற்கும், வீட்டை பராமரிப்பதற்கும் எவ்வித சம்பளக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அலியா அஹமட் ஃபெலாஹ் அல் ஹ_னாட்டி என்ற பெண்ணுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹ_னாட்டி, இலங்கைப் பிரஜையை சமையல் அறையில் உறங்குமாறு பலவந்தப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வீசா பெற்றுக் கொள்வதற்காக தம்மை மணந்து கொள்ளுமாறும் இலங்கையரை இந்தப் பெண் வற்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பலவந்த திருமணம், அடிமை சேவகத்தில் ஈடுபடுத்தியமை, ஊதியம் வழங்காமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஹ_னாட்டி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலவந்தமாக பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுக்காக அதிகபட்சமாக இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹ_னாட்டிக்கான தண்டனை விபரங்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.