பெண்களை பாதுகாக்க வீடுகளில்ஆயுதம் வைத்திருக்க சட்டத்தில் இடமுண்டா?

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் வீடுகளில் வாள் வைத்து கொள்வதற்கு அனுமதியில்லை என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் கைப்பற்றப்பட்ட வாள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் வாள் வைத்து கொள்ளுமாறு ஜனாதிபதி கூறினார் என அமீன் என்ற நபர் நேற்று கூறியிருந்தார்.

வீடுகளில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்காக வாள்கள் வைத்திருப்பதாக இன்னும் ஒரு தரப்பு கூறுகின்றது.

எனக்கு தெரிந்த அளவில் இலங்கையில் அப்படி ஒரு சட்டம் இல்லை. அப்படி என்றால் இலங்கையில் சட்டங்களை மாற்றி அமைக்க நேரிடும்.

வீடுகளில் ஆபத்தான பொருட்கள் வைத்திருந்தால் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் இரண்டு முறையும் சிக்கினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என சட்டத்தில் உள்ளது.

அப்படி என்றால் இனிமேல் ஆயுதங்கள் வைத்து கொள்ள அனுமதி பத்திரம் பெற வேண்டும் என்று ஒரு சட்டம் தான் அமைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..