ஐ.எஸ். அமைப்பின் இலங்கை உறுப்பினர்களின் 60 பேரின் விபரங்கள் சஹ்ரானின் கணனியில்

Report Print Steephen Steephen in சமூகம்

ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இஸ்லாமிய அரசு அமைப்பின் இலங்கை உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பின் வலையமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்த 60 பேர் தொடர்பான சகல தகவல்களையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

நுவரெலியா பிரதேசத்தில் மொஹமட் சஹ்ரான் ஹசிம் நடத்தி வந்த பயிற்சி நிலையத்தில் அண்மையில் கைப்பற்றிய கணனியில் இருந்து இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

கணனியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

இந்த பெயர் பட்டியலில் இருந்த முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் பிபிலை பிரதேசத்தில் நேற்று கைது செய்துள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி கைது செய்த நபரின் பெயரும் இந்த பட்டியலில் இருந்தது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.