மன்னாரில் இரத்த தான நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

தேசிய மட்டத்தில் இரத்த தானம் வழங்கல் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி தலைமையில் இரத்த தானம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பல்வேறு வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உத்தியோகஸ்தர்கள், பொது மக்கள் மற்றும் தள்ளாடி இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நாளை காலை 8 மணிமுதல் மக்கள் இரத்ததானம் செய்ய முடியும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி தெரிவித்துள்ளார்.