ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும், இலங்கையில் அமெரிக்கா அமைத்துவருகின்ற தளங்களும்!!

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஆராதனைகளின் பொழுது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்காவைத் தொடர்புபடுத்தி பல செய்திகள், பேச்சுக்கள், வதந்திகள் மக்கள் மத்தியில் உலாவந்துகொண்டிருக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பைக் காரணம் காண்பித்து அமெரிக்க உளவு அமைப்பும், அதன்; படைகளும் இலங்கைக்கு வந்துவிடப்போகின்றன என்றும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை விரும்பாத அமெரிக்கா இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து இலங்கைக்குள் நுழைய விளைவதாகவும், நடைபெற்ற தற்கொலைத்தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்காவே இருப்பதாகவும் கூட பேச்சடிபட்டுக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா தொடர்பாகப் பேசப்பட்டுவரும் கதைகளில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது?

அமெரிக்காவின் தலையீடு காரணமாக இலங்கையின் இறைமை பாதிக்கப்பட்டுவிடும் என்று இலங்கையிலுள்ள சில தேசியவாதிகள் கூறுவதில் அர்த்தம் இருக்கின்றதா?

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: