மரபணு பரிசோதனை நடத்த சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியை பெற அனுமதி

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - ஷெங்கிரீலா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிமின், மகளின் இரத்த மாதிரியை பெற்று மரபணு பரிசோதனை நடத்த, நீதிமன்றம், இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் மீட்கப்பட்ட சஹ்ரான் ஹசிமுடையது என சந்தேகிக்கப்படும் தலைப்பகுதியின் மாதிரி மரபணு பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

அதேவேளை தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் தங்கையின் இரத்த மாதிரியை பெற்று மரபணு பரிசோதனை நடத்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. சஹ்ரானின் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.