திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனை மடக்கிப் பிடித்த பொலிஸார்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை நெளுக்குளம் பொலிஸார் இன்று மதியம் கைது செய்துள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் இன்று மணிபுரம் பகுதியில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்றும் களவாடப்பட்டது.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசாநாயக்கவின் ஆலோசனையின் கீழ் பொலிஸ் ஜெயரூபனின் வழிகாட்டலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது மணிபுரம் பகுதியினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனை நெளுக்குளம் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளையடுத்து மணிபுரத்தில் களவாடப்பட்ட தண்ணீர் இறைக்கும் மோட்டாரை பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.