500 மலையக தமிழ் பிள்ளைகளுக்கு அடிப்படைவாத இஸ்லாம் கற்பிக்கப்பட்டுள்ளது! அத்துரலியே ரத்ன தேரர்

Report Print Steephen Steephen in சமூகம்

அரசாங்கம் எடுக்கும் மேற்குலக சார்பு தீர்மானங்களின் அடிப்படை இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இப்படியான தீர்மானத்தின் எதிர்ப்பு நடவடிக்கையாக அது இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரசியலிலேயே பிரதான அடிப்படைவாதம் உருவாக்கின்றது. இதனால், அரசியல் ரீதியான எடுக்கும் தீர்மானங்கள் முக்கியமானது.

இந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு காணிகளை வழங்கும் கொள்கையை ஜனாதிபதியோ பிரதமரோ உருவாக்கக் கூடாது. இப்படியான ஒன்றை செய்ய அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை.

திருகோணமலையில் அமெரிக்காவின் முகாம் அமைக்கப்பட்டால், சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பொறியாக அல்லது தாக்குதல் தளமாக இலங்கை மாறும்.

இவ்வாறான நிலைமை தொடர்பாக இஸ்லாமிய அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. முஸ்லிம் சமூகத்தில் நாட்டை பற்றி சிந்திக்கும், உலகத்தை அறிந்த அலி சப்ரி போன்ற புத்திசாலியான நபர்கள் தேவை.

நாடாளுமன்றத்தில் தற்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பற்றி பேசப்படுகிறது. இந்த சட்டத்தை கொண்டு வந்தால், புலனாய்வு பிரிவுகளின் வெளிப்படை தன்மை வெளிநாட்டு அமைப்புகளுக்கு கிடைக்கக் கூடும். அத்துடன் புலனாய்வு பிரிவினர் சுதந்திரமான செயற்பட முடியாது போகும்.

அரசாங்கம் இன்னும் சிறிது காலமே ஆட்சியில் இருக்கும். உடனடியாக மக்களின் நிலைப்பாட்டுக்கு இடமளித்து, நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும். துரிதமாக தேர்தலை நடத்தி நாட்டு மக்களுக்கு தீர்மானத்தை எடுக்க இடமளிக்க வேண்டும்.

மலையகத்தை சேர்ந்த 500 தமிழ் பிள்ளைகளுக்கு கடந்த ஒருவருடமாக எந்த நபரோ யாருக்கும் தெரியாமல் இஸ்லாத்தை கற்பித்து வந்துள்ளார். இதனை கல்வி திணைக்களம் கூட அறிந்திருக்கவில்லை. புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த நிலைமையை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியுள்ளனர் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.