வாள்கள் கைப்பற்றியமை தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் சரியான காரணத்தை கூறவில்லை - ஓமல்பே சோபித தேரர்

Report Print Steephen Steephen in சமூகம்

பள்ளிவாசல்களில் முஸ்லிம்களிடம் இருந்து வாள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் குறித்து ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணத்தை முஸ்லிம் தலைவர்கள் எவரும் இதுவரை முன்வைக்கவில்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

காடுகளை வெட்டவும், முஸ்லிம் மாயானங்களை துப்பரவு செய்யவுமே பள்ளவாசல்களில் வாள்கள் வைக்கப்பட்டிருக்கும் என முஸ்லிம் அமைச்சர் கூறினார்.

மற்றுமொரு தலைவர் சுன்னத் செய்தல் போன்ற சமய நடைமுறைகளுக்கும் கத்திகள் பயன்படுத்தப்படும் என கூறினார். இந்த பதில்கள் மிகவும் கவலைக்குரிய பதில்கள்.

முழு நாடும் பீதியில் இருக்கும் நிலையில், இந்த முஸ்லிம் தலைவர்கள் கூறுவது உண்மையா? பொய்யா என்ற சந்தேகம் நடுநிலையான மக்களிடம் இருக்கின்றது.

காடு வெட்ட எவரும் வாள்களை பயன்படுத்துவதில்லை. அது மட்டுமல்லாது முஸ்லிம் வீடுகளில் பெண்களின் பாதுகாப்புக்கு வாள்கள் வைக்கப்பட்டிருக்கும் என்பது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.