யுவதி ஒருவரை கடத்த முயற்சித்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் கைது!

Report Print Kamel Kamel in சமூகம்

யுவதி ஒருவரை கடத்த முயற்சித்த இரண்டு இராணுவச் சிப்பாய்களை ஹிக்கடுவ பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பூசா மற்றும் பனாகொடை இராணுவ முகாம்களில் கடமையாற்றியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த யுவதி காதலனுடன் அகுரல கடற் கரைப்பில் இருந்த போது அந்த இடத்திற்குச் சென்ற இராணுவச் சிப்பாய்கள் காதலனை அச்சுறுத்தி, குறித்த யுவதியின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன், தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர்.

குறித்த யுவதிக்கு இன்று தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய படைச் சிப்பாய்கள் தங்களுடன் வருமாறு கோரியுள்ளனர்.

இது விடயம் குறித்து யுவதி தாயிடம் குறிப்பிட்டதாகவும், தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.