சட்டவிரோதமாக வாள் ஒன்றை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும்

Report Print Kamel Kamel in சமூகம்

நபர் ஒருவர், வாள் ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்தால் நீதிமன்றம் 50 ரூபா அபராதம் விதிக்கும் என பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் இன்றைய தினம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் வியடம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் அமீன் என்ற ஒரு நபர் வீடுகளில் வாள் வைத்திருப்பதாக ஜனாதிபதி கூறியதாகவும், பெண்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சாதாரண வீடுகளில் வாள்கள் வைத்திருப்பதில்லை, அரேபிய வீடுகளில் அவ்வாறு வாள்கள் இருப்பதாக நாம் கேள்வி பட்டிருக்கின்றோம்.

சட்டவிரோதமாக வாள் வைத்திருந்தால் முதல் தடவையாக இருந்தால் 50 ரூபா அபராதம், இரண்டாவது தடவையாக இருந்தால் 100 ரூபா அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.