தீவிரவாதத்திற்கு எதிரான மகாசொஹொன் பலகாயவின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

Report Print Murali Murali in சமூகம்

கண்டி - திகன பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக நாளைய தினம் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மகாசொஹொன் பலகாயவின் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டி மற்றும் தெல்தெனிய நீதவான் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதவானின் உத்தரவு அடங்கிய அறிக்கை மகாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நாளைய தினம் மகாசொஹொன் பலகாய அமைப்பினால் கண்டி - திகன பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.