இலங்கைக்கான நிதியுதவியினை விஸ்தரிக்க சர்வதேச நாணய நிதியம் உத்தேசம்

Report Print Kanmani in சமூகம்
92Shares

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியம் ஊடாக இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவியினை மேலும் விஸ்தரிக்கவுள்ளதாக நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த வாரம் நடைப்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையின் போது, இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கான சகல உதவிகளையும், பூரண ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார் என அறிவித்துள்ளது.

மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக 760 மில்லியன் யூரோ உதவிகளை ஐரோப்பிய ஒன்றியமும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.