இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கை முல்லைத்தீவில் தொடர்கின்றது

Report Print Mohan Mohan in சமூகம்

தமிழ்மொழி பேசத் தெரிந்த இராணுவத் தலைமை அணிகளின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கை முல்லைத்தீவில் தொடர்கின்றது.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என இராணுவத்தினர் பொது மக்களிடம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் கடத்த 5 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் பொது வேலைத்திட்டங்கள் மற்றும் கலை விழாக்கள், விளையாட்டு போட்டிகள் போன்ற நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது பொது மக்களுக்கு அச்சுருத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்வதில் இராணுவத்தினர் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.