யாழ்ப்பாணத்தில் கோவில் வளாகத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு!

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம் - தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருட்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பன கோவில் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers