யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதிய பயணிகள் பேருந்து

Report Print Yathu in சமூகம்

யாழ். எழுதுமட்டுவால் பகுதியில் புகையிரதத்துடன் மோதி சிறிய ரக பேருந்தொன்று இன்று காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்தின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடனேயே கொடிகாமம் நோக்கி சென்ற குறித்த சிறிய ரக பயணிகள் பேருந்து மோதியுள்ளது.

எனினும் சம்பவம் இடம்பெற்ற போது பயணிகள் யாரும் பேருந்தில் இருக்கவில்லை என தெரியவருகிறது.

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.