புத்த பெருமானின் வழிகாட்டலுடன் புதிய இலங்கை

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கை கலாச்சாரத்தின் மீது பௌத்த சமயமே கூடுதல் தாக்கம் செலுத்துவதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எனவே பௌத்த சமயத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய முஸ்லிம்களும், கத்தோலிக்கர்களும் செயற்படுவதன் மூலம் சக வாழ்வை கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாததத்தை தோற்கடிப்பதற்கான ஐம்பெரும் திட்டங்களை உள்ளடக்கிய செயற்றிட்டத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கூறுகையில், பேதங்களை மறந்து புத்த பெருமானின் வழிகாட்டலுடன் சகல இனத்தவர்களும் சமத்துவமாக வாழக்கூடிய புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers