கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுகிறதா மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம்?

Report Print Vethu Vethu in சமூகம்

மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் இடமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத்தின் செயலாளர் பேராசரியர் வன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மாத்திரம் கற்கும், ஷரீஆ கல்வி மற்றும் வங்கி கணக்கு போன்ற கற்கை நெறிகளே கற்பிக்கப்படுகின்றது.

தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களும் இங்கு சாதாரண பல்கலைக்கழகம் போன்று கல்வி கற்கலாம் என ஹிப்புல்லா கூறியுள்ளார்.

இலங்கையில் வசிக்கும் தமிழ் அல்லது சிங்கள மாணவர்கள் ஒருவர் புனானி பிரதேசத்திற்கு சென்று பணம் செலுத்தி கல்வி கற்பார்கள், பட்டம் பெறுவார்கள் என நான் நினைக்கவில்லை.

ஹிஸ்புல்லா கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றி கொள்வதற்கு இந்த இடத்தை வைத்திருந்தாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.