கொழும்பிலிருந்து யாழிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது நீதிபதி இளஞ்செழியனது தகப்பனாரின் உடல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் இன்றும், நாளையும் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் யாழ். கொக்குவில் மேற்கு, கேணியடியிலுள்ள அன்னாரின் புதல்வரான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையனின் இல்லத்திற்கு சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் கொண்டு செல்லப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று 11 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் தகன கிரியைகள் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் மரணச் செய்தியால் அவர்களின் உறவினர்கள் அனைவரும் மீளத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Latest Offers