இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட இளைஞன் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Kaviyan in சமூகம்

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்காகப் போராடும் 23 வயது இளைஞன் தமது சிகிச்சைக்காக பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளார்.

சுந்தர்ராஜ் நிலோசன் எனும் 23 வயது இளைஞன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார்.

இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது சிறுநீரகங்களை வெகுவிரைவாக மாற்றினால் மாத்திரமே இவரைக் காப்பாற்ற முடியும் என இவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இவரது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 30 இலட்சம் ரூபாய் பணம் தேவை எனவும் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களால் கூறப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற யுத்தத்தால் இவரது குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இவரது தந்தை கூலித் தொழிலாளி, தாயார் மனநலம் குன்றியவர்.

இவரது சத்திரசிகிச்சைக்குத் தேவையான 30 இலட்சம் ரூபாய் பணத்தினை, மிகவும் ஏழ்மையான நிலையில் காணப்படும் இவரது குடும்பத்தினரால் திரட்ட முடியாத நிலையில் கருணை உள்ளங்கொண்டவர்களிடம் தனது உயிர் காக்க உதவுமாறு உதவி கோரியுள்ளார்.

இவரது நோய் தொடர்பில் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள், கிராமசேவையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகளும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

உதவி கோரும் சுந்தர்ராஜ் நிலோசனது தொலைபேசி இலக்கம்: 0094772623841, வங்கிக் கணக்கு இலக்கம்: 146020138533

இவர் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் தொலைபேசி இலக்கமான 0094776913244 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.