ஐ.எஸ் பயங்கரவாதிகளி்ன் அச்சுறுத்தல் தொடர்பில் இராணுவ தளபதி தகவல்!

Report Print Steephen Steephen in சமூகம்

ஐ.எஸ். தீவிரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சுறுத்தல் இல்லை எனவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அணியை பாதுகாப்பு தரப்பினர் அடக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஏற்பட்ட நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ்.அமைப்பு சம்பந்தம் இருந்தாலும் அந்த அமைப்பு நேரடியாக இந்த தாக்குதலை வழிநடத்தியது என்று கருதவில்லை. எனினும் தாக்குதலுக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்து பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சஹ்ரான் ஹசீம் ஈஸ்டர் தின தொடர் தாக்குதலை வழிநடத்திய மற்றும் கட்டளையிட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் இந்த தீவிரவாதம் சம்பந்தமான தலைமையை எதிர்பார்க்கும் மேலும் முக்கியமான செயற்பாட்டாளர்கள் இருக்கலாம்.

குண்டுதாரி தேசிய ரீதியில் தயாரித்த வெடிப் பொருட்களை அதிகளவில் தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளனர். சில வெடிப் பொருட்கள் இந்தியாவின் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers