முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த பொதுக் கூடத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சபையின் மாதாந்த அமர்வு சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் சபை சபாமண்டபத்தில் ஆரம்பமாகியது.
இங்கு சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வீரபாகு தேவர் அவர்களினால் இம் மாதத்தில் எமது உறவுகள் கொத்துக்கொத்தாக அழித்தொழிக்கப்பட்டனர் எனவும் அவர்களுக்கான அஞ்சலி மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பின்னர் சபையின் அனைத்து உறுப்பினர்களும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார்கள்.