வவுனியாவில் கைக்குண்டொன்று மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - மயிலங்குளம் பகுதியிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலங்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் கைக்குண்டு காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே நேற்று மாலை கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers