ஐரோப்பிய நாடொன்றின் தேர்தலில் போட்டியிடும் இலங்கை யுவதி

Report Print Steephen Steephen in சமூகம்

இத்தாலியின் ஃரென்சி நகரில் வசித்து வரும் 19 வயதான சிங்ஹார முதலிகே ஹங்சிகா பெரேரா என்ற இலங்கை யுவதி எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஃரென்சி நகர சபைத் தேர்தலில் 4வது தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஃரென்சி நகர சபையின் தொகுதிகளுக்கு 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஹங்சிகா தனது இரண்டு வயதில் இருந்து பெற்றோருடன் இத்தாலி சென்றுள்ளார். ஹங்சிகா, ஃரென்சி நகரில் உள்ள சீ.ஜீ.ஐ.எல். ஃல்கெம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் சபையின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஹங்சிகா, சிங்ஹார முதலிகே சமன் பெரேரா என்பவரின் மூத்த மகள். சமன் பெரேரா தொழிலாளர் சட்ட ஆலோசகராகவும் சமூக சேவையாளராக இருந்து வருகிறார்.

சமன் பெரேரா கடந்த 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டு ஃரென்சி நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவானவர்.

ஹங்சிகா பெரேரா, ஸ்னெவ்டிச்சி ரசல் நியூடன் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.