சஹ்ரானின், ஐ.எஸ் பக்கம் அழைக்கிறார் இருவட்டு! திருகோணமலையில் சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் “சஹ்ரானின், ஐ.எஸ் பக்கம் அழைக்கிறார்” எனும் இருவட்டினை வைத்திருந்த இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புல்மோட்டை, ஜின்னாபுரம் பகுதியை சேர்ந்த 38 மற்றும் 27 வயதுடைய இருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் அதில் ஒருவர் மௌலவி எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களின் வீட்டினை சோதனை செய்த போதே “சஹ்ரானின், ஐ.எஸ் பக்கம் அழைக்கிறார்” என்ற இருவட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

Latest Offers