பேரன் தாக்கியத்தில் பாட்டி உயிரிழப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

பேரனின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி நேற்று உயிரிழந்துள்ளதாக வண்ணாத்துவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வண்ணாத்துவில்லு, இஸ்மையில்புரம் - மயிலங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 93 வயதான மஹிபாலகே எக்னஸ் என்ற பெண்மணியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்மணியும் அவரது பேரனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையில் கடந்த 7 ஆம் திகதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது பேரன் பொல்லால் தாக்கியத்தில் பெண்மணி ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன. மூதாட்டியை தாக்கியதாக கூறப்படும் 17 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வண்ணாத்துவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.