முகமாலை உப அஞ்சல் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Yathu in சமூகம்

முகமாலை உப அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று காலை 8.30 மணியளவில் நாட்டி வைக்கப்பட்டது.

யுத்தத்தினால் கட்டட வசதி இல்லாமல் பளை பிரதேசத்தில் இயங்கிவரும் முகமாலை உப அஞ்சல் அலுவலகம் சொந்த பிரதேசத்தில் இயங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

30 வருடங்களின் பின்னர் முகமாலை பகுதியில் அஞ்சல் சேவையை முன்னெடுக்கும் வகையில் நிரந்தர கட்டடம் அமைப்பதற்காக அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் நிதியிலிருந்து 15 லட்சம் பெறுமதியில் குறித்த உப அஞ்சல் அலுவலகம் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் குறித்த பகுதியிலிருந்து சேவையை முன்னெடுக்க முடியும் எனவும் நம்பப்படுகின்றது.