சஹரானின் ஆதாரங்களை தம்வசம் வைத்திருந்த நபர் சரீரப் பிணையில் விடுதலை

Report Print Satha in சமூகம்

தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொகமத் சஹரானின் உரையடங்கிய இறுவட்டுக்களை தம்வசம் வைத்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட மௌலவி சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததும், அவர் ஒரு இலட்ச ரூபாவுக்கான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதியத்தலாவை ரகுமானியா ஜும்மா பள்ளிவாசலின் தலைமை மௌலவியே, விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவினரால், கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை பொலிஸ் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட பள்ளிவாசலை சோதனையிட்டுள்ளனர்.

அச் சோதனையின் போது தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரின் உரையடங்கிய இறுவெட்டுக்கள் பல மீட்கப்பட்டதுடன், மௌலவி கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மௌலவி, நேற்று வெள்ளிக்கிழமை தெகியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி மௌலவியை ஒரு இலட்ச ரூபா சரீரரப்பிணையில் விடுவித்து, எதிர்வரும் 26ஆம் திகதி மீளவும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.