கிண்ணியா, நடுவூற்றுப் பகுதியில் வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா, நடுவூற்றுப் பகுதியில் செமட செவன தேசிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பினால் இன்று வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

செமட செவன தேசிய வீடமைப்புத் திட்டம் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கான மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்கள் இதன் போது உருவாக்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி, பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருக்குமரன், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர் ராலியா மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.