ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த மௌலவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Report Print Theesan in சமூகம்
1942Shares

ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மௌலவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் - முதலியாகுளத்தில் வசித்து வரும் முனாஜிப் மௌலவி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த முனாஜிப் மௌளவி கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மௌலவி சவுதி அரேபியாவிலிருந்து இன்று காலை நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்அவரை முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.