கிளிநொச்சி, கண்டாவளைப் பகுதியில் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Yathu in சமூகம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளைப் பகுதியில் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கண்டாவளைப் பகுதியில் இன்று காலை அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு புதிய வீடுகளுக்கான கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதில் கண்டாவளை பிரதேச செயலர் ரீ. பிருந்தாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடின்றி வாழும் மக்களுக்கான வீடுகளை வழங்கவும் மாதிரிக் கிராமங்களை உருவாக்கும் வகையிலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.